புதிய லோக்பால் வரைவுமசோதா பயன் இல்லாதது மத்திய மந்திரிசபை ஒப்புதல் தந்துள்ள , புதிய லோக்பால் வரைவுமசோதா பயன் இல்லாதது, அது மக்களுக்கு பலன் தராது என்று அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது, இந்த பலவீனமான கேலிக் கூத்தான மசோதாவை ஏற்றுக்கொள்ள இயலாது. தாங்கள் பரிந்துரைத்துள்ள ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி தொடர் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தார்.

வலிமையான லோக்பால்_மசோதாவை பிரதமரோ, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ கொண்டுவருவார்கள் என நம்பமுடியாது என்று ஹசாரே பேட்டியின்போது குறிப்பிட்டார்.

Leave a Reply