கடைசி நேர குழப்பத்தை தவிர்க்க முன்கூட்டியே வேட்பாளரை அறிவிப்பது  நல்லது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; 2014-ம் வருடம் நடைபெற இருக்கும் மக்களவை பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவேண்டும்.

கடைசி நேர குழப்பத்தை தவிர்க்க முன்கூட்டியே வேட்பாளரை அறிவிப்பது நல்லது. பிரதமர் பதவி 2014ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் முடிவடைந்து விடுகிறது. அந்த நேரத்தில் பிரதமர் வேட்பாளர் பற்றி முடிவெடுப்பதை விட முன்கூட்டியே ஆலோசித்து முடிவுசெய்வதில் தவறொன்றும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply