குதிராம் இறந்தபிறகு அவனது சாம்பலை வங்கத்து தாய்மார்கள் தங்கத்தினை அள்ளுவது போல அள்ளி தங்களின் குழந்தைகளுக்கு பாலில் கலந்துஊட்டிய வீர வரலாற்றினை கடந்த பதிவில் பார்த்தோம்.

வந்தேமாதரம் எனும் பத்திரிகையில் அரவிந்தர் எனப்படும் அரவிந்த கோஷ் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதி வந்தார், அரவிந்தரின் தம்பி பரீந்திரகுமார் கோஷ் புரட்சி இயக்கமான அனுசீலன் சமிதி யை தலைமை தாங்கி நடத்தி வந்தார். அரவிந்தரின் மாணிக்தலா வீடே வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலை ஆயிற்று.

1907 டிசம்பர் மாதம் வங்காள கவர்னர், சர் ஆண்ட்ரு பிரேசர் பயணம் செய்த ரயிலைக் கவிழ்க்கவும், சர் பேம்பிள்டே என்பவனை தீர்த்துக் கட்டவும் முயன்ற புரட்சிக்காரர்களின் முயற்சி தோல்வியுற்றது,

ஆனாலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பேயாய் அலறியது, புரட்சிக்காரர்களை பிடிக்கவும், புரட்சி இயக்கமான அனுசீலன் சமிதியை அடக்கவும், அவசர உத்தரவுகளை பிறப்பித்து விட்டு ஆயிரம் போலிசார்களை காவலுக்கு வைத்துக்கொண்ட பின்னரும், தூக்கமின்றி புலம்பினான் கவர்னர், சர் ஆண்ட்ரு பிரேசர்.

வங்க போலிஸ் எங்கு சுற்றியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் எரிச்சலடைந்து ஒருநாள் அரவிந்தரின் வீட்டுக்குள் சோதனையிட்டனர், கல்கத்தா நகரில் உள்ள அரவிந்தரின் வீட்டை சோதனையிட்ட போது அங்கு சில கடிதங்களும், புரட்சி இயக்க குறிப்புகளும் சிக்கின.

அரவிந்த கோஷ், அரவிந்தரின் தம்பி பரீந்திரகுமார் கோஷ், உபேந்திரநாத் பானர்ஜி, ஹேமச்சந்திர தாஸ், உல்லாஸ்கர் தத்தா, கனையலால் தத்தா, சத்தியேந்திரநாத் போஸ் மற்றும் 32 பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். ஏராளமான வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள் ஆகியனவும் கைப்பற்றப் பட்டன,

அலிப்பூர் குண்டு வீச்சு சதி வழக்கு என்ற பெயரில் வழக்கு ஆரம்பமானது. இந்த வழக்கில் நாராயண் கோஸ்வாமி என்பவன் அப்ருவராக மாறி புரட்சி இயக்க்கத்தினை காட்டிகொடுக்கும் கருங்காலியாய் மாறிவிட்டான். அரசாங்கத்தரப்பில் சாட்சி சொல்லவும் சம்மதித்தான். அவனது சாட்சியம் பதிவு செய்யப்பட்டால் கிட்டத்தட்ட நாற்பது பேரின் உயிரும் தூக்கில் தொங்க நேரிடும், இதனைத் தடுப்பது எப்படி என்று ஆளுக்கு ஆள் யோசிக்க ஆரம்பித்தனர், கனையலால் தத்தா, சத்தியேந்திரநாத் போஸ் என்ற புரட்சி வீரர்கள் தங்களுக்குள்ளேயே பேசி ஒரு முடிவு எடுத்தனர், இதனை தலைவர்கள் யாரிடமும் கூறவில்லை.

இருவரும் தங்கள் உயிரை பணயம் வைத்தாவது தங்கள் தலைவர்களையும் , தோழர்களையும், என்று தீர்மானித்த அவர்கள் தாங்களும் அப்ருவராக மாறி அரசு தரப்பில் சாட்சி சொல்ல விரும்புவதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர், சிறை அதிகாரிகளுக்கு சிந்தை குளிர்ந்தது, அதிகாரிகள் அவர்களின் விருப்பத்தினை கேட்டனர்,

அதற்கு " எங்களை போல அப்ருவராக மாறியுள்ள நாராயண் கோஸ்வாமியை நாங்கள் சந்தித்து பேச வேண்டும், நாங்கள் மூவரும் கலந்து பேசி யார் யார் எப்படி வாக்குமூலம் கொடுக்கவேண்டும் என்பதினை முடிவு செய்ய வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள்" என்றான் கனையலால், அதிகாரிகளும் நாராயண் கோஸ்வாமியை தனியாக அடைக்கப்பட்ட விசேஷ சிறை வார்டுக்கு அழைத்து சென்றுவிட்டு சற்று ஒதுங்கி நின்றனர்,

உள்ளே சென்றதுதான் தாமதம். நாராயண் கோஸ்வாமியின் கால்களை ஆளுக்கொன்றாய் பிடித்து அவன் உடலை இருவரும் கிழித்தே கொன்றார்கள்,

நன்றி ; ராம்குமார்

Leave a Reply