வெங்கையா நாயுடு சென்ற விமானத்தில் எந்திரகோளாறுபா.ஜ.க தலைவர்கள் வெங்கையா நாயுடு, லலிதா குமார மங்கலம் ஆகியோர் இன்று ஒரு தனியார் விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி சென்றனர். இவர்களுடன் இந்த விமானத்தில் மேலும் 46பேர் பயணம் செய்தனர்.

இவர்களது விமானம் நடுவானில் பறந்தபோது எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது . இதை கண்டு பிடித்த விமானி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார்.

அதைதொடர்ந்து சென்னையில் விமானம் அவசரகால நடவடிக்கையாக பத்திரமாக தரை இறக்கப்பட்டது. சரியான நேரத்தில் எந்திரகோளாரை கண்டுபிடித்து விமானம் தரை இறக்கப்பட்டதால் வெங்கையா நாயுடு உள்ளிட்ட 48பேர் உயிர்தப்பினர்.

Leave a Reply