நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை மிகவும் கவலை தரும் விதமாக இருக்கிறது நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை மிகவும் கவலை தரும் விதமாக இருக்கிறது . தற்போது இளைஞர்களை வழி நடத்துபவர்கள், ஜனநாயகத்தில் அவர்களுக்கிருந்த நம்பிக்கையை இழக்க செய்து விட்டனர். இதுவே நமக்கு இப்போதுதிருக்கும் மிகப் பெரிய சவாலாகும்

என்று பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவரும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவருமான சுஷ்மா சுவராஜ் பேசியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில பாஜக இளைஞர் அமைப்பின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் அவர் பேசியதாவது ;-தற்போது அரசியல் என்பது ஊழல்களால் நிறைந்து ஒழுங்கற்றதாக ஆகிவிட்டது என்று இளைஞர்கள் கூறுகின்றனர். ஜனநாயகம் அழிந்தால் சர்வதிகாரம் தலை தூக்கும். இதை நடக்க விட கூடாது .இளைஞர்கள் இதை அனுமதிக்கக் கூடாது . இளைஞர்களால் புரட்சி கரமான மாற்றங்களை அரசியலில் கொண்டு வர முடியும். பா.ஜ.க.,வின் இளைஞர் அமைப்பை சேர்ந்தவர்கள் இளைஞர்களிடம இது குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Leave a Reply