தேவகோட்டை அருகே கண்ணன்குடியில் பா.ஜ.க பிரமுகர்  வெட்டிக்  கொலை தேவகோட்டை அருகே கண்ணன்குடியில் பா.ஜ.க பிரமுகர் படைவென்றான் மர்மநபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இதனால் அந்தப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கண்ணன்கு டியைச் சேர்ந்தவர் குப்புசாமி என்பவரின் மகன் படைவென்றான் இவர் அந்தப்பகுதியில் பா.ஜ.க.,வில் வளர்ந்துவரும் முக்கிய பிரமுகராவார்.

இந்நிலையில், இன்று அவர், கண்ணன்குடியிலிருந்து தேவகோட்டைக்கு காரில் வந்தார். பருத்திக்கொடி என்ற ஊருக்கு அருகே வந்த போது, எதிரில் ஒருகாரில் வந்த மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்தகாயமடைந்த படைவென்றானை சிகிச்சைக்காக தேவகோட்டை கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். பிறகு அவரது உடல் தேவகோட்டை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனால் இந்தப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply