மோடி குறித்து கட்ஜுவின் கருத்து பகைமைகொண்டு விமர்சிப்பதாக இருக்கிறது குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை விமர்சித்து பத்திரிகையில் கட்டுரை எழுதிய இந்திய பிரஸ்கவுன்சில் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜுவை பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.

“கோத்ராவில் நிகழ்ந்த சம்பவம் இப்போதும் மர்மமாகவே இருக்கிறது ‘, “2002-ம் வருடம் நிகழ்ந்த சம்பவங்களில் மோடிக்கு எந்தப்பங்கும் இல்லை என கூறுவது நம்புவதற்கு கடினமாக இருக்கிறது ‘ என்று குஜராத்த்தில் நிகழ்ந்த கலவரம் குறித்து எழுதிய கட்டுரையில் மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அருண்ஜேட்லி, “மோடி குறித்து கட்ஜு எழுதியிருக்கும் கட்டுரை தனிப்பட்டமுறையில் பகைமைகொண்டு விமர்சிப்பதாக இருக்கிறது.

இந்திய பிரஸ்கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து கட்ஜு உடனடியாக விலகவேண்டும். அவர் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அந்த கட்சியை சேர்ந்தவர்களையும் விட அதிகவிசுவாசமாக செயல்படுகிறார்.

காங்கிரஸ் இல்லாத கட்சிகள் ஆளும்_மாநிலங்களான குஜராத், பிகார், மேற்குவங்கம் என்று தேர்வுசெய்து கட்ஜு விமர்சிக்கிறார். இதன் மூலம் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றபின் தனக்கு பதவி தந்தவர்களுக்கு விசுவாசமாக செயல்படுகிறார்.

தனது அரசியல்கருத்துகளை தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அவர் இப்போது வகிக்கும்பதவி அதற்கு ஏற்புடை யதல்ல. எனவே அவர் பதவியிலிருந்து விலகி விட்டு நேரடியாக அரசியலில் ஈடுடலாம் என ஜேட்லி கூறியுள்ளார்.

Leave a Reply