ஐதராபாத் குண்டுவெடிப்பு அக்கறையற்ற அரசு என்பதை காட்டுகிறதுஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவம், ஆந்திரமாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசும், மத்திய காங்கிரஸ்அரசும், மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு என்பதை வெட்டவெளிச்சமாக காட்டியுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

2012ல் கைதுசெய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் அமைப்பைசேர்ந்த பயங்கரவாதிகள் தாங்கள் ஏற்கனவே ஐதராபாத் நகரத்தில் குண்டுவைக்க இடம் தேர்வுசெய்து விட்டதாகவும் அதற்கான பணிகளை தொடங்கி விட்டதாகவும் வெளிப்படையாகவே காவல்துறை விசாரணையில் அறிவித்திருந்தனர்.

இந்த தகவல் டெல்லிஅரசுக்கு தெரிவிக்கப்பட்டதா? ஆந்திரமாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா? ஏன தெரியவில்லை.

உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை உடனே அமைச்சரவையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். பாஜக சார்பில் சமூக நல்லிணக்க பாதயாத்திரை வரும் மார்ச் 21ம்தேதி கிருஷ்ண கிரியில் தொடங்கி சேலத்தில் நடை பெறுகிறது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply