பதினோரு முக ருத்ராட்சம் பதினோரு முக ருத்ராட்சம் ஆஞ்சநேயரின் அருள் பெற்றது.ஏகாதச ருத்திரர்களின் அருள் நிறைந்தது. இந்த மணியை  அணிவதாலோ, பூஜிப்பதாலோ சிறந்த பேச்சாற்றல் ,வியாபார திறமை ,தன்னம்பிக்கை, உடல் வலிமை ,ஆற்றலைப் பெறலாம் .மீண்டும் இவ்வுலகில் பிறப்பு எடுப்பதைத் தடுக்கும். அட்ச உணர்வுகளை நீக்கும்.

அதிர்ஷ்டம்,தலைமைப் பதவிகளைத் தரும் ஆற்றல் இந்த மணிக்கு உண்டு.யோகிகள் உச்சந்தலையில் அணிவதற்கு பதினோரு முக ருத்ராட்சத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த மணியை அணிவதாலும் ,பூஜிப்பதாலும் ஆயிரம் அசுவமேதயாகம் செய்த பலனையும் ,
பசுக்களைத் தானம் செய்த பலன்களையும் பெறலாம்.என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

புலனடக்கம்,நீண்ட ஆயுள்,பாதுகாப்பு ,வெற்றி அனைத்தையும் தரும். இம்மணி, விபத்துகளால் வரும் அகால மரணத்தையும் தடுக்கிறது.

"பதினோரு முக ருத்ராட்சத்தில் எனது அம்சமான ஏகாதச ருத்திரர்கள் வசிக்கிறார்கள்" என்று சிவபெருமான் கூறியுள்ளதாகக் கந்தபுராணம் தெரிவிக்கிறது.

இம்மணியும் அபூர்வமாகவே கிடைக்கிறது .

யார் அணியலாம் :

அச்ச உணர்வு உள்ளவர்கள்,வாழ்வில் வளம்'பெற விரும்புபவர்கள் இதை அணியலாம்' ,தியானம் , யோகத்தில் ஈடுபடுபவர்களுக்குச சிறந்த மன ஒருமைப்பாட்டை தரும் ஆற்றல் இந்த மணிக்கு உண்டு .

மருத்துவ பயன்கள்:

இது வயிற்றில் கோளாறு,வயிற்றில் புளிப்புத்தன்மை ,கல்லிரல் கோளாறு ,மார்பு நோய்களைக் குணமாக்கும்.

இதை அணிவதால் மார்பில் தோன்றும் வலி,நீரிழிவு நோய்,ரத்த அழுத்த நோய்கள் குணமாகின்றன.

ருத்ராட்சமும் ஜோதிடமும்:

இதற்க்கு ஜோதிட அடிப்படையில் ஆதிக்கக் கிரகம் இல்லை.இதை அணிவதால் அருஞ்சாதனைகள் புரியலாம்.தியானத்தில் உயர்வு தரும்.

ருத்ராட்ச மந்திரம்:

ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ:

நன்றி: ருத்ராட்சம் நூல் ஆசிரியர் கீர்த்தி

Leave a Reply