முதல்வர் ஜெயலலிதாவை பாரதமாதாவாக சித்தரித்தர்க்கு எதிராக வழக்கு முதல்வர் ஜெயலலிதாவை பாரதமாதாவாக சித்தரித்து விளம்பரம் செய்தது குறித்து அமைச்சர் வைகை செல்வன் மீது நெல்லை நீதிமன்றத்தில் இந்துமுன்னணி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு மேல்விசாரணைக்காக வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது .

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை பாரத மாதா போன்று சித்தரித்து அ.தி.மு.க.,வினர் சார்பில் ஒரு வாரப் பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்திருந்தது . இந்தசெயலால் ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் வேதனை அடைந்துள்ளன.

இதை தொடர்ந்து வாரப்பத்திரிகையில் விளம்பரம்செய்த அமைச்சர் வைகை செல்வன் மற்றும் தென் சென்னை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் கேசி.விஜய் உள்பட மூன்று பேர் மீது இந்துமுன்னணி வழக்கறிஞர் பிரிவு மாநிலசெயலாளர் குற்றால நாதன் நெல்லை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல்செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மேல் விசாரணைக்காக 9ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

Leave a Reply