அமைதியை நோக்க உண்மையாகஇஸ்லாமிய புத்தக நிலயம் சார்பில் கோவையில் நடைபெற்ற "வாழ்வியல் கண்காட்சியில் ஐ.ஏ.எஸ். தேர்வுவில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது..

சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாமும், அழகிய கடன் ஐ.ஏ.எஸ்.அகாடமி தலைவர் சம்சுதீன் கஜிமியும், விளக்கி பேசினர்..—

இது நேற்றைய தினத்தந்தி 11 ஆம் பக்க செய்தி..

இதிலென்ன விமர்சிக்க இருக்கிறது?

விமர்சனத்திற்கு முன்னர் ஒரு விஷயத்தை பார்ப்போம்..

"அமைதியை நோக்கி " என்னும் பெயரில்…..ஆம் பெயரில்…( பெயரில் மட்டும்தானா? )…இஸ்லாமிய இயக்கங்கள் கோவையில் மார்ச் 1—2—3 ந்தேதிகளில்..கீழ்கண்ட விஷயங்கள் கொண்ட தலைப்பில் பொருட்காட்சி நடத்தினர்..

1..இஸ்லாமிய அறிவியல் கண்காட்சி

2..சர்வசமய கலந்துரையாடல்

3..சிறப்புரைகள்…

4.கல்வி—வேலை வாய்ப்பு வழிகாட்டல்

5..நபி வழி மருத்துவம்

6..ஹலால் பொருட்காட்சி

7..இயற்கை வேளாண் உற்பத்திக்கான வழிமுறைகள்

8. கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஐ.ஏ.எஸ்..அகாடமி பயிற்சி..

இந்த தலைப்புகளில்..எண் 1—3—5—6—முழுவதும் வெளிப்படையாக இஸ்லாமிய மயமானது…

எண் 2—4—7—8—இஸ்லாமியர் சிந்தனையில் "மாற்றம்" வந்துள்ளது போன்ற "தோற்றத்தை " ஏற்படுத்தும் முயற்சியின் அங்கமாக இருந்தது..

அது தோற்றமா?—மாற்றமா?—என்பது போகப்போக தெரியும்..

தோற்றமாக இருந்தால் நமக்கு ஏமாற்றமே—

மாற்றமாக இருந்தால் அது அவர்களுக்கு ஏற்றமே..

சரி ஐ.ஏ.எஸ்சுக்கு வருவோம்…மக்கா மஸ்ஜித் தலைமை இம்மாம்…சம்சுதீன் காஜிமி "கிளாஸ்" எடுக்கிறார்..என்பது வரவேற்கத்தக்கதே…

முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்துடல் இரண்டற கலக்க வேண்டுமானால்,

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும்.."உசுப்பேத்தல்" பிரசங்கங்கள் நிறுத்தப்பட்டு, இம்மாதிரி வகுப்புக்களை.."வெள்ளிக்கிழமை—மசூதி பிரசங்கங்களில் " நிகழ்த்தினால் இஸ்லாமிய இளைஞர்கள் "தெளிவு " பெருவார்கள்.. …..

"அமைதியை நோக்கி " என்ற தலைப்பு உண்மையாகும்…

"ஹைதிராபாத் குண்டுவெடிப்புக்கள்"—பழங்கதையாகும்..இந்தியா  அமைதிப்பூங்காவாகும்…

செய்வார்களா?—

எஸ்.ஆர்.சேகர் எம்.ஏ.பி.எல்
மாநிலப் பொருளாளர்–பாஜக

Leave a Reply