தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள புகைப்படம் போரின் ஒரு கோரமுகத்தை வெளிப்படுத்தி யுள்ளதுடன் அந்தப்புகைப்படம் உக்கிரமான இலங்கைப் போரின் ஒருசான்றாக அமைந்துள்ளது என்று

மத்திய முன்னாள் அமைச்சரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் இலங்கைபிரச்சனை தொடர்பான விவாதத்தில் மேலும் அவர் பேசியதாவது.

கனத்த இதயத்துடன் இந்தவிவாதத்தில் பங்கேற்கிறேன். இலங்கை நமது நெருங்கிய அண்டைநாடு என்பது அனைவரும் அறிந்ததே . நமது நெருங்கிய சகோதரர்கள் இலங்கைபோரில் உயிரிழந்துள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு இழைக்கபடும் கொடுமைகள் தொடர்கிறது.

பாலச்சந்திரன் பலியான புகைப்படத்தை பார்க்கும் போது வேதனையடைவது நிச்சயம். பாலச்சந்திரன் புகைப்படம் போரின் ஒரு கோரமுகத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாலச்சந்திரன் புகைப்படம் உக்கிரமான இலங்கைப் போரின் ஒரு சான்று.

மாறிவரும் சூழலில் இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவேண்டும். இலங்கை விவகாரத்தை எளிதாக அணுகமுடியும் என்பது என் அனுபவத்தில் உருவான நம்பிக்கை.

விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது இந்தியாவில் தேர்தல்நேரம். இதனைப் பயன் படுத்தி ராஜபக்ச தமிழர்களை கொன்றுகுவித்தார்.

இலங்கை நமது நெருங்கிய அண்டைநாடு என்பது அனைவருக்கும் தெரியும். சிங்களபடை வெற்றிக்கு இந்தியா உதவியதும் ஒருகாரணம் என ராஜபக்சே அப்போது தெரிவித்திருந்தார்.

சென்னையில் தி.மு.க., தலைவர் கலைஞரை சந்தித்து தேசியபாதுகாப்பு ஆலோசகர் அளித்த உறுதிமொழி வேறு. இலங்கை சென்றபின்னர் தேசியபாதுகாப்பு செயலாளர் தெரிவித்தகருத்துக்கள் வேறு.

இலங்கை போர் தொடர்பாக செஞ்சிலுவை சங்கம் தந்த எச்சரிக்கையை இந்திய அரசு கேட்க தவறி விட்டது. 1987ஆம் ஆண்டு 13வது சட்டதிருத்தத்தை அமல்படுத்த இலங்கை அரசு ஒப்புக் கொண்டது.

தேர்தல்வெற்றிக்கு பிறகு இலங்கை அதிபர் இந்தியாவந்தார். அப்போது இலங்கை பிரச்சனைக்கு சமூகதீர்வு காணப்படும் என அவர் உறுதியளித்தார். ஆனால் இலங்கை தமிழர்கள் மீதான வன்முறை மனிதஉரிமை மீறல்கள்பற்றி எதுவும் அவர் தெரிவிக்கவில்லை.

போரால் பாதிக்கப்பட்ட அப்பாவிமக்களுக்கு உதவவேண்டும் என்பதும் பா.ஜ.க.,வின் கருத்தாக இருந்தது. இலங்கை வடக்குப்பகுதியில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பதே பா.ஜ.க.,வின் நிலைப்பாடு. இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக நான் கண்ணீர்வடிக்கிறேன்.

ராணுவத்தை இலங்கை வடக்குபகுதியில் இருந்து திரும்பப்பெற இந்தியா வலியுறுத்த வேண்டும். அத்து மீறல்களை நிறுத்தி விட்டு ராணுவம் பாசறைக்கு செல்லவேண்டும். 13வது சட்டதிருத்தத்தை இலங்கை அரசு உடனடியாக அமல்படுத்த அழுத்தம்கொடுக்க வேண்டும்.
தமிழர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதிகாரபகிர்வுக்கு வழி வகுக்கவேண்டும். தமிழர்கள் மீதான இனப் படுகொலை குறித்து நியாயமான விசாரணை நடத்தவேண்டும்.

சர்வதேச அமைப்பு பிரதிநிதிகள்மூலம் விசாரணை நடத்த வேண்டும். ஐநா.வில் இலங்கை அரசின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான தீர்மானத்தை இந்தியாவே வடிவமைக்கவேண்டும். இந்தியா இலங்கை இடை யேயான விவகாரத்தில் எந்தவெளிநாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க கூடாது என்றார்.

Leave a Reply