ராவணனை ராமன் கொன்றான்! காங்கிரசை ஊழல் கொல்லும்!!!மக்களின் பிரச்னைகளை புரிந்துகொண்டு அதைதீர்க்க நடவடிக்கை எடுக்கும் உண்மையான பிரதமர்தான் நாட்டிற்கு தேவை, பணவீக்கத்தை பற்றியெல்லாம் கவலை படாத பொருளாதார பிரதமர் தேவையில்லை என பா.ஜ.க , தலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார். ‌

மேலும் கடந்த 9 வருடங்களாக பண வீக்கத்தை கட்டுப்படுத்த தற்போதையஅரசு தவறிவிட்டது என்றும் , ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் பணவீக்கம் குறையும் என்றும பிரதமர் உறுதி அளிப்பதாகவும், ஆனால் ஒன்றும் நடக்க வில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.

ராவணனை ராமன் கொன்றான் என்பதும், ஒசாமா வை ஒபாமா கொன்றார்_என்பதும் அனைவரும் அறிந்ததே , அதே போன்று காங்கிரசை ஊழல்கொல்லும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்

Leave a Reply