உயிருக்கு உலை வைக்கும்  ஆசிட் வீச்சு பல்வேறு ஊர்களில் பல்வேறு பெண்களின் மீது ஆசிட் வீசி– அவர்கள் முகத்தை பாழ் அடித்தது ஒருபுறம்— உயிருக்கு உலை வைத்தது ஒரு புறம்— எதனால் வீசினார்கள்? எப்படி வீசினார்கள்?

நீண்ட ஆராய்ச்சிக்கு உரியவை.இவை—. இதனால் ஏற்ப்படும் இழப்புக்கள் நிரந்தரமானவை —கொடுரமானவை —

முகமோ உடலின் ஏதாவது ஒரு பகுதியோ வெந்து போகும்..–முகத்தில் வீசினால் பலநேரம் கண்கள் குருடாகும் —

இதனால் "ஆசிட் விர்ப்பனையை தடை செய்ய மற்றும் முறைப்படுத்த தமிழக அரசும் மற்ற மாநில அரசுகளும், சட்டம் இயற்ற போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

எந்த ஆசிட்டை எப்படி வீசினால், எவ்வளவு முகம் சிதைந்து போகும்? என " பார்மூலா " எல்லாம் நான் எழுதி பாவம் சம்பாதிக்க போவது இல்லை..

மாறாக நைட்ரிக் அமிலம் ….பெரும் காயம்—பெரும் தீங்கு —ஏற்படுத்துவது கந்தக அமிலமும், (சல்புரிக் ஆசிட்) –நைட்ரிக் ஆசிடும், ( நைட்ரிக் அமிலம் ), தான்..

இவைகள் கடைகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுவது இல்லை. வீடுகளில் ட்டாயலேட் சுத்தம் செய்யவும்– பொதுவாக பயன் படுத்துவது இல்லை..காரணம் இவை ரொம்ப காட்டமானது.. விநியோகஸ்தர்கள் இடம் மட்டுமே கிடைக்கும்—தங்க நகை தயாரிப்பாளர்கள் தங்கள் பணிக்காக இதை வைத்து இருப்பார்கள்..

" பெரும் பாதிப்புக்களை " உண்டாக்கும் இவை சாதாரண கடைகளில் கிடைக்காது. குற்றவாளிகள் இதை திட்டம் போட்டு –இருக்கும் இடம் அறிந்து, போய் மட்டுமே வாங்க முடியும்,,

மூன்றாவது ஆசிட் ஹைடிரோ குளோரிக் ஆசிட்.—.இது 33% மட்டும் சக்தி கொண்டதே சந்தையில் கிடைக்கும்..கண் தவிர உடலின் எந்த பகுதியில் இது பட்டாலும் , உடனடியாக தண்ணீர் கொண்டு கழுவினால், போதுமானது..நீண்ட நேரம் கழித்து கழுவினால், காயமோ எரிச்சலோ உண்டாகும்,,

இந்த குறிப்புக்கள் எழுதுவதன் காரணம், கடைகளில் பாட்டில்களில் அடைத்து "வைத்துள்ள ஸ்டெயின் ரிமொவர்கள்"25% முதல் 30% வரை மட்டுமே ஹைடிரோ குளோரிக் அமிலம் கொண்டது..அதுவும் ஒருசில கம்பனி அமிலங்களில் 20% முதல் 25% ஆசிட்டும், 25% சோப்பும் கலந்தது.. இவை உடனடியாக தொலை எரிக்காது ..

இவைகளை விற்க லைசன்ஸ் போடுவது அபத்தம் …காரணம் இவைகளை பெரும்பாலும் "குறுந்தொழில்" முனைவோரே செய்து கொண்டு இருக்கிறார்கள்.

மற்றபடி நைட்ரிக் –கந்தக அமிலங்கள், விற்பதை முறைப்படுத்த வேண்டியது கட்டாயம் –அதுவும் உடனடியாக ..

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்  

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply