பாலியல் உறவுகொள்ளும் வயது குறைப்பு   பாஜக   கடும் எதிர்ப்பு பெண்களுக்கு எதிரான குற்றதடுப்பு மசோதாவில் விருப்பத்துடன் பாலியல் உறவுகொள்ளும் வயது 16 ஆக குறைக்க பட்டுள்ளதற்கு பாஜக , கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளன.

இந்த் புதிய மசோதாவில் விருப்பத்துடன் பாலியல் உறவுகொள்ளும் வயது 18ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதியமசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்றுமுன்தினம் ஒப்புதல் தந்தது . இந்த மசோதா பற்றி அரசியல் கட்சிகள்மத்தியில் ஒருமித்தகருத்து ஏற்படுத்துவதற்காக வரும் திங்கள்கிழமை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

இதில் விருப்பத்துடன் உறவுகொள்வதற்கான வயது வரம்பை 16 ஆக குறைத்திருப்பதற்கு பாஜக , சமாஜ்வாடி, திரிணாமுல், ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவுசெய்துள்ளது.

இது குறித்து சட்டீஸ்கர் மாநில பாஜ முதல்வர் ராமன் சிங் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்தியாபோன்ற பழமையான நம்பிக்கைகளில் ஊறிப் போன சமூகத்தால் இதுபோன்ற அல்ட்ரா மாடர்ன் திருத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார் .

ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் அம்மாநில பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே கூறுகையில், வயதைகுறைப்பது குறித்து விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும் என்றார்.

Leave a Reply