பரமக்குடியில் பதற்றம்  பஜக பிரமுகர் வெட்டிக் கொலை  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி முன்னாள் கவுன்சிலரும் பா.ஜ.க., பிரமுகருமான முருகனை மர்மநபர்கள் சிலர் இன்று பட்ட பகலிலேயே வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முருகன், இன்று காலை பரமக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மற்றொரு பைக்கில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

பிறகு கொலையாளிகள் பைப்வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இத் தாக்குதலில் நிலைகுலைந்து சரிந்தமுருகன், சிறிது நேரத்திலேயே இறந்தார்.

பிறகு அந்தக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் வெடிக்காமல் கிடந்த 2 பைப் வெடிகுண்டுககளை கைப்பற்றினர்.

இதற்கிடையே கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று பரமக்குடி அர்ச் அருகில் பஜக மற்றும் பரமக்குடி வியாபாரிகள் பஸ்மறியலில் ஈடுபட்டனர்.

Leave a Reply