பெண்களுக்கு எதிரான  பாலியல் குற்றத்தடுப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது டெல்லியில் சென்ற ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி பலியானதை தொடர்ந்து , பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும்வகையில் சட்ட திருத்த மசோதா உருவாக்கப்பட்டது.

இந்தமசோதா தொடர்பாக நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்க பட்டது. அப்போது, சம்மதத்துடன்கூடிய செக்ஸ் உறவுக்கான வயது வரம்பு 18-ல் இருந்து 16ஆக குறைக்கும் பரிந்துரையை பாஜக உள்ளிட்ட கட்சிகள் பல எதிர்த்தன. இதைதொடர்ந்து அவர்களின் கோரிக்கை ஏற்கப் பட்டு, மசோதாவில் திருத்தம் செய்யப் பட்டது.

திருத்தம்செய்யப்பட்ட மசோதா நேற்று மத்திய அமைச்சரவையில் தாக்கல்செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதை தொடர்ந்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, இன்று மக்களவையில் மசோதாவை தாக்கல்செய்தார். பிறகு விவாதம் நடைபெற்றது.

உறுப்பினர்களின் விவாதத்துக்கு பதில் தந்து ஷிண்டே பேசினார். பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்ற பட்டது.

Leave a Reply