தமிழகம் ஒரு காஷ்மீரமாக ஆகிவிடக்கூடாது! 1980-களில் இந்தியா ஈழப் போராளிகளுக்கு ஆதரவாக இருந்தது. ஆயுதப்பயிற்சியும் கொடுத்தது. அப்போது ஈழப் போராட்ட இயக்கங்களின் தலைவர்கள் நமது தமிழ் இளைஞர்கள் மனதில் மாபெரும் வீரர்களாகவும் பராக்கிரமசாலிகளாகவும் காட்சியளித்து கதாநாயகர்களாகப் போற்றப்பட்டார்கள். கலூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த நானும் அவர்களைக் கதாநயகர்களாகத்தான்

போற்றிக்கொண்டிருந்தேன். அப்போது நடந்த மாபெரும் மாணவர் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டவன் நான்.

ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் பல விஷயங்கள் நடந்துவிட்டன. இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் அன்னிய சக்திகள் புகுந்து, பிரிவினைவாதத்தை தூபம் போட்டு வளர்த்து, அதன் மூலம் தமிழகத்திலும் பிரிவினை எண்ணங்களை ஏற்படுத்தி, தமிழ் தீவிரவாத இயக்கங்களை தோற்றுவித்து, இந்தியாவின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் பல நிகழ்வுகள் நடக்கக் காரணமாக இருந்துள்ளன;

அந்த அன்னிய சக்திகள் மேலும் மேலும் வலிமை பெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதற்கு தற்போது நடக்கும் போராட்டங்களே சாட்சி.

இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. அதே சமயத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்பிக்க நினைக்கும் அன்னிய சக்திகளின் பொறியில் நாம் விழுந்துவிடக்கூடாது. அதாவது ஈழத் தீவிரவாதிகளுக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் உள்ள வேறுபாடை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரிவினைவாதம் என்பது வேறு; ஒன்றிணைந்த ஆட்சி முறைக்கும் உரிமைகளுக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் பெறுவது என்பது வேறு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார்போல் இலங்கை வாழ் சகோதரர்களின் நலனுக்கு நாம் போராட வேண்டும்.

வெளியுறவுக்கொள்கை என்பது வேறு; தேர்தல் பிரச்சனை என்பது வேறு. தேச விரோத கும்பல்கள் கிளப்பிவிடும் இறையாண்மைக்கு எதிரான ஒரு கோட்பாடை தேர்தல் பிரச்சனையாக ஆக்கி நமது நாட்டின் வெளியுறவுக்கொள்கையில் தேவையில்லாத மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிப்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போலத்தான்.

பிரச்சனையின் வீரியத்தையும் அது நமது நாட்டுக்கு ஆபத்தானது என்பதையும் புரிந்துகொள்ளாமல் போராட்டத்தில் குதிப்பது ஆபத்து.

அன்னிய சக்திகளைக் கண்டுணர்ந்து அவைகளின் தீய நடவடிக்கைகளை புறக்கணித்து இந்தியா தன்னுடைய சொந்த முயற்சியிலேயே இலங்கை வாழ் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கு நன்மைகளைச் செய்யமுடியும். அதற்கு தேசப்பற்று மிக்க, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருக்கும் கலாச்சார ஆன்மீக உறவைத் தெளிவாக அறிந்துள்ள ஒரு அரசு தேவை.

அது பாரத கலாச்சாரத்தைப் பற்றிய வாசனையே தெரியாத ஒரு அன்னியப் பெண்மணியின் தலைமையில் நடக்கும் அரசினால் கண்டிப்பாக முடியாது. அன்னியத்தலைமையில் நடக்கும் ஆட்சி அன்னிய சக்திகளுக்குத்தான் உதவும்.

ஆகவே தற்போது தங்கள் எதிர்காலத்தைப் பணயம் வைத்துப் போராடிக்கொண்டிருக்கும் மாணவச் செல்வங்கள் தயவு செய்து ஓராண்டு பொறுத்திருந்தாலே போதும். அடுத்து வருகின்ற தேர்தலில் அன்னியப் பெண்மணியின் தலைமையில் நடக்கும் அரசைத் துரத்திவிட்டு பாஜக தலைமையில் ஒரு அரசு அமைய வாக்களிப்போம். இவ்வாறு செய்வதே நாம் நமது இலங்கைத் தமிழர்களுக்குச் செய்யும் பெரும் சேவை.

இலங்கை வாழ் நம் சகோதரர்களுக்கு கண்டிப்பாக நன்மை விளையும்.

நன்றி ; Harsh Thamizh

Leave a Reply