பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி ஒருநேர்மையான அரசியல்வாதிபா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி ஒருநேர்மையான அரசியல்வாதி. அவரது வார்த்தையை நான் மதிக்கிறேன். என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது மகன் அகிலேஷ் அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்களின் போக்கு குறித்தும் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; அகிலேஷ் அமைச்சரவையில் இருக்கும் ஒரு சில அமைச்சர்கள் சுய நலநோக்குடன் செயல் பட்டு வருகின்றனர். இது கவலை தருகிறது. பா.ஜ.க, மூத்த தலைவர் அத்வானி என்னை தொடர்புகொண்டு பேசினார். ஒரு சில அமைச்சர்களின் செயல்கள் குறித்து என்னிடம் தெரிவித்தார். இவர்கூறும் வார்த்தையை நான் மதிக்கிறேன். அத்வானி ஒருநேர்மையான அரசியல்வாதி.

நாட்டில் ஊழல் பெருகிவருவதற்கு காங்கிரசே பொறுப்பு . காங்கிரஸ் ஆட்சியில் சீனா இந்திய எல்லைபகுதியை ஆக்கிரமித்துள்ளது. இது பாரதிய ஜனதா ஆட்சியில் நடக்க வில்லையே.

நான் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்தபோது சீன படையினர் எல்லைக்கு வந்தபோது அவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டேன். ஆனால் காங்கிரஸ் அரசு இதனை செய்ய வில்லை காங்கிரஸ் ஒரு பலவீனமான அரசு. நாட்டில் விலைவாசி உயர்வுக்கும், ஊழலுக்கும் காங்கிரஸ் அரசுதான் பொறுப்பு . என்று முலாயம் பேசினார்.

Leave a Reply