மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது வீட்டில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தற்காக இந்தி நடிகர் சஞ்சய்தத்திற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் 5 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என்ற கருத்துக்கு ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி மேலும் கூறியதாவது:-

சஞ்சய்தத்திற்கு தண்டனை விலக்கு அளித்தால், அந்தமுடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்.‘தண்டனையில் இருந்து மன்னிப்பு என்பது பொதுநன்மையை சார்ந்ததா? என பரிசீலிக்க வேண்டும்’ சஞ்சய்தத் விவகாரத்தில் அவரது தண்டனையை ரத்துசெய்வதற்கான எந்த பொதுநன்மையும் காணப்படவில்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply