கர்நாடகா மாநிலத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு பிரகாசமான வாய்ப்புள்ளது என கர்நாடக மாநில துணை முதல்வர் ஈஸ்வரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை வந்திருந்த அவர் மேலும் பேசியதாவது;

காவிரி விவகாரம் கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் எதிரொலிக்காது. எடியூரப்பாவாலும், காவிரி விவகாரத்தாலும் பா.ஜ.க.,வுக்கு பெரியபாதிப்பு இருக்காது.

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு பெரியளவில் பின்னடைவு ஏற்படவில்லை.வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., வெற்றிபெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

முறைகேடுகளில் ஈடு படுபவர்கள் நிச்சயம் பா.ஜ.க.,வில் இருந்து ஓரங்கட்ட படுவார்கள், கட்சியின் தூய்மையைக்காப்போம்.

மத்திய அரசு காவிரி விவகாரத்தைவைத்து விளையாடி வரும் அரசியல் துரோகங்களை கர்நாடக மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.

தமிழகத்துக்கு காவிரியில் உரியதண்ணீர்ப் பங்கை சரியாகவே கர்நாடகம் அளித்துவருகிறது. ஆனால், காவிரியில் நீர் இல்லாமல் போகும் போது தான் பிரச்னை எழுகிறது. என்று அவர் கூறினார்.

Leave a Reply