நரேந்திர மோடியை சந்தித்த   அமெரிக்க  குழு குஜராத்தில் 2002ம் வருடம் நடந்த கலவரத்தை காரணமாக வைத்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை அமெரிக்கா ஒதுக்கி வந்த நிலையில் இன்று அமெரிக்ககுழு ஒன்று மோடியை சந்தித்துள்ளது.

அமெரிக்க வர்த்தகர்கள் மற்றும் பாராளுமன்றத்தை சேர்ந்த 18பேர் கொண்டகுழு ஒன்று அகமதாபாத்தில் அமைந்துள்ள சபர்மதி காந்தி ஆசிரமத்துக்கு வந்துள்ளது.

இதனை அடுத்து அந்தகுழு குஜராத் மாநில முதவரின் வீட்டிற்கு சென்று அவருடன் பேசியது. ஒருமணி நேரமாக இந்தகூட்டம் நடைபெற்றுள்ளது. அமெரிக்க குழுவை வரவேற்ற நரேந்திரமோடி கடினமான உழைப்பினால் தான் நாட்டில் முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply