திக்விஜய் சிங் மீது ஜாமினில் விடமுடியாத வாரண்ட் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய்சிங். கடந்த 2011ம் ஆண்டு, மத்திய பிரதேசத்தில் இருக்கும் உஜ்ஜைன் நகருக்கு வந்தபோது பாஜக. இளைஞரனியை சேர்ந்தவர்கள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டினர்.

கருப்புக்கொடி காட்டியவர்களை திக்விஜய்சிங் மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரேம்சந்த் உள்ளிட்ட காங்கிரசார் விரட்டிச்சென்று தாக்கினர் , இதனை தொடர்ந்து உஜ்ஜைன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தவழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் 10வது கூடுதல் அமர்வுநீதிபதி திபேஷ்திவாரி சம்மன் அனுப்பியிருந்தார்.

இதனை ஏற்று, அனைவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால், திக்விஜய்சிங், பிரேம்சந்த்குட்டு ஆகியோர் மட்டும் ஆஜராகவில்லை.

நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கும்படி இருவரின் சார்பிலும் நீதிபதியிடம் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்தமனுவை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி, இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தும்படி, ஜாமினில் விடமுடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Leave a Reply