நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால் அதை ஏற்க தயார் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால் அதை ஏற்க தயார் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:- பாஜக தனிப்பட்ட

முறையில் பெரிய கட்சியாக உள்ளது. சமீபத்தில் பாஜக.,வில் மாற்றியமைக்கப்பட்ட நிர்வாககுழுவை ஐக்கிய ஜனதா தளம் வரவேற்றுள்ளது. பீகார் முதல்மந்திரி நிதிஷ் குமாருக்கும் எங்களுக்கும் எந்தபிரச்சனையும் இல்லை. அவர் எங்கள் கூட்டணியில்தான் நீடிக்கிறார்.

பாஜக.,வில் யார் பிரதமர் வேட்பாளர்? யாரை முன்னிலை படுத்துவது என்பதை கட்சியின் பாராளுமன்றகுழுவில் விவாதித்து முடிவுவேடுப்போம். நரேந்திரமோடியை மூத்த முதல்மந்திரி என்றவகையில் பாராளுமன்றகுழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவர் பிரபலமானவர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இதுகுறித்து நரேந்திர மோடியிடம் நான் விவாதித்ததில்லை. ஒருவேளை நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டால் அதை ஏற்க நான்தயார்.

யஸ்வந்த் சின்கா, ஜஸ்வந்த்சிங் உள்ளிட்டோர் ஆட்சிமன்ற குழுவில் இடம்பெறாதது ஏன் என்று கேட்கிறார்கள். அவர்கள் இருவருமே கட்சியின் தேசிய நிர்வாககுழு உறுப்பினர்களாக உள்ளர்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். என்று அவர் கூறினார்.

Leave a Reply