காந்தி குரங்கைப்போன்றவர் மன்மோகன் சிங்  காந்தியின் ‘தீயவற்றை பார்க்காதே – தீயவற்றை பேசாதே – தீயவற்றை கேட்காதே’ என்ற கோட்பாட்டின் படி அமர்ந்திருக்கும் காந்தி குரங்கைப்போன்றவர் மன்மோகன் சிங் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் நிதின்கட்காரி கூறியுள்ளார்.

இது குறித்து நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

மேல் உலகத்தில் இரும் காந்தி, சித்ர குப்தனிடம் ‘எனது மூன்று குரங்குகள் பூமியில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன?’ என கேட்பதுபோல் எனக்கு சமீபத்தில் ஒரு எஸ்எம்எஸ். வந்தது. இதற்கு சரியானபதில் கூறவேண்டும் என்றால்.. கண்ணை மூடிக்கொண்டிருக்கும் முதல் குரங்குபோல் இந்த நாட்டின் சட்டம் உள்ளது.

வாயை மூடி கொண்டிருக்கும் குரங்கைப்போல் எது குறித்தும் பேசாமல் பிரதமர் மன்மோகன்சிங் கடைபிடிக்கும் மவுனம் அமைந்துள்ளது. காதை மூடிக்கொண்டிருக்கும் குரங்கிற்கு இணையாக ஐ.மு., கூட்டணியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்று அவர் கூறினார்.

Leave a Reply