பா.ஜ.கவை தமிழ்நாட்டில் வலுப்படுத்த கட்சிக்கு வளர்ச்சிநிதி திரட்ட முடிவு செய்யப்படு . மாநிலம் முழுவதும் நிதிவசூல் தீவிரமாக நடந்து வருவதாக பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மேலும் கூறியதாவது:- தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்று பா.ஜ.க., தான் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

தமிழகத்திலும் பா.ஜ.க மக்களிடம் செல்வாக்குபெற்று வளர்ந்து வருகிறது. இது வரை கட்சி வளர்ச்சிநிதி திரட்டிதில்லை. முதல் முறையாக வளர்ச்சி நிதிதிரட்டும் பணியை ஸ்தாபன தினத்திலிருந்து தொடங்கியுள்ளோம்.

இதற்காக ரூ. 10 முதல் 10 ஆயிரம்வரை ரசீது அச்சிடப்பட்டு வழங்க பட்டுள்ளது. வீடுவீடாக கிராமம் கிராமமாக நிர்வாகிகள் மக்களை சந்தித்து நிதிதிரட்டி வருகிறார்கள். வரும் 17-ம் தேதி வரை இந்தபணி நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒருகுறிப்பிட்ட தொகை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்துக்கு ரூ. 1 1/2 கோடி இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது. தேசியம்காக்க, தேசப்பணியாற்ற கட்சிவளர்ச்சி நிதியை பொதுமக்கள் வாரிவழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

Leave a Reply