பிரதமர்வேட்பாளர்  குறித்து எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லை பாரதிய ஜனதா பிரதமர்வேட்பாளர் யார் என்பது குறித்து , உயர் மட்ட தலைவர்களிடையே எந்த விதமான கருத்துவேறுபாடுகளும் இல்லை; இதுதொடர்பாக, பா.ஜ.க., பார்லிமென்ட் போர்டு தான் முடிவுசெய்யும்,” என்று , பாஜக., பொது செயலர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.

பாட்னாவில், நிருபர்களிடம் இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு.,கூட்டணி அரசு, எல்லா விதத்திலும் தோல்விகண்டுள்ளது. இதனால், வரும் லோக் சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியடைந்து, பா.ஜ.க., ஆட்சியை கைப்பற்றும்.

பிரதமர் வேட்பாளர் குறித்து , பாஜக , உயர்மட்டத் தலைவர்களிடையே எந்த விதமான கருத்துவேறுபாடுகளும் இல்லை. ராஜ்நாத்சிங் தலைமையில், எல்லா தலைவர்களும் ஓரணியில் உள்ளோம். பிரதமர்வேட்பாளர் யார் என்பது பற்றி கட்சியின், பார்லிமென்ட் போர்டுதான் இறுதி முடிவுசெய்யும். கட்சியின் நிலைகுறித்து, உரியநேரத்தில், மீடியாக்களுக்கு தெரிவிக்கப்படும். என்று ராஜிவ் பிரதாப்ரூடி தெரிவித்தார்.

Leave a Reply