கறுப்புபணத்தை மீட்க, நடவடிக்கை எடுக்கவேண்டும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புபணத்தை மீட்க, நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று , ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு, பாஜக மூத்த தலைவர், அத்வானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, தனது இணையபக்கத்தில், அத்வானி மேலும் தெரிவித்திருப்பதாவது :நிதியமைச்சராக, பிரணாப்முகர்ஜி இருந்த போது, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புபணத்தை கொண்டுவர, அரசு முழு மூச்சுடன் நடவடிக்கை எடுக்கும் என்று , பார்லிமென்டில் வெள்ளையறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

கறுப்புபண முடக்கம் பற்றி ஆராய, 3 அமைப்புகள் நியமிக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகள் ஆனபிறகும், லேசான முன்னேற்றம்கூட ஏற்படவில்லை.நைஜீரியா, பெரு, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட , குட்டி நாடுகள்கூட, வெளிநாடுகளில் பதுக்கியிருந்த, கறுப்புபணத்தை, சொந்த நாட்டுக்கு கொண்டுவந்துள்ள நிலையில், இந்தியாவால் கொண்டுவர முடியாதது, ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

நிதியமைச்சராக இருப்பதைவிட, மிக உயரியபொறுப்பான, ஜனாதிபதி பதவியில் இருக்கும் பிரணாப், இப்போது அந்த பணியை எளிதாக மேற்கொள்ளமுடியும்.நாட்டின் நலன்கருதி, இதை அவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். என்று அத்வானி அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply