சித்தர்களும் மழையும்  அந்த நாளில் சில ஊர்கள் வறட்சியால் வாடின.மக்கள் தண்ணீர் இன்றிச் செத்து விழுந்தனர் .கால் நடைகளும் நீரின்றித தவித்த போது அந்த ஊர் பக்கமாக வந்த சித்தர்கள் அதற்கான காரணத்தை கண்டறிந்து ஊரின் அமைப்பில் சில மாற்றங்கள் செய்து மழை பெய்ய செய்தனர் .

 

மழை பெய்வது இயற்கையின் கையில் , அதற்கு ஒரு ஊரின் அமைப்பு என்ன செய்யும் என்று கேட்கலாம் .ஆனால் சித்தர்கள் மழைப் பொய்க்காமல் இருக்க, நுட்பமான பல வழி முறைகளைத் தெரிந்து வைத்திருந்தனர்.அதன் படி அவர்கள் ஊரின் முக்கியமான இடங்களில் ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்களையும் வெட்ட வெளியில் சில கற்களையும் நட்டு வைத்துச் சென்றனர் .

கொதிக்கும் வெயில் நேரங்களில் கல் மரங்களில் அக்னி அலை உருவாகும் . குளிர் நிழல் மரங்களிலோ அதற்கு நேர் எதிரான அலை உருவாகும் .இரண்டும் கலந்திடும் போது அது ஒரு வித ஜீவ வாயுவாக மாறி மேலெழும்பும். அப்போது சுற்று வட்டாரத்தில் சுமாரான அளவு கார் மேகங்கள் இருந்தாலும் அவைகளி அந்த வாயுக்கள் இழுத்திட அங்கே மழை பேயும் வாய்ப்பு உருவானது.

இன்று ஊரில் அப்படிப்பட்ட சிறப்புகளை விரிவாக்கம் என்ற பெயரில் நாம் இழந்து விட்டோம்.

இந்திரா சௌந்தர்ராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *