ஐக்கிய ஜனதா தளத்துடன் எந்த பிரச்னையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாஜக தயாராகவே உள்ளது என பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என நாடு முழுவதும் குரல்கள் வலுவாக வலுத்து வரும் நிலையில் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், இது குறித்து பாஜக. தேசியத்தலைவர் ராஜ்நாத்சிங் தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; ஐக்கிய ஜனதா தளம், எங்களின் மிகப்பழமையான கூட்டாளியாகும். ஏதேனும் பிரச்னை இருந்தால் நாங்கள் ஒன்றாகஅமர்ந்து பேசி, அதற்குத் தீர்வுகாண்போம். அதற்கு பாஜக. தயாராக உள்ளது என கூறினார்

Leave a Reply