தர்மம்காக்க அவதரித்த ராமன் மனிதன் உலகில் எப்படி வாழவேண்டும் என்பதை மக்களுடன் மக்களாக வாழ்ந்து வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய_அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம்.

பங்குனி மாதம் புனர் பூச நட்சத்திரத்தில், கிருஷ்ண பட்ச நவமி

திதியில்தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ராமர் அவதாரம் எடுத்தநாளையே ராமநவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். ராம நவமி இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இந்த நன்னாளில் ராமனின் பெருமைகளை அறிந்துகொள்வோம்.

தர்மம்காக்க அவதரித்த ராமன்

தர்மம் அழிந்து, அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் மண்ணுலகையும், மக்களையும் காக்க மகா விஷ்ணு அவதாம் எடுத்தார் என்கின்றன புராணங்கள். இவற்றில் ஏழாவதாக எடுத்த ராமஅவதாரம் மனித அவதாரமாக இருந்ததால் சிறப் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முந்தைய அவதாரங்களான மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராமர் அவதாரம் ஆகியவை, நீர் வாழ்வனவாகவும், விலங்காகவும், விலங்கும், மனிதனும் இணைந்தும்காணப்படும்.

இந்த ராம அவதாரத்தில்தான் மனிதர்கள்படும் அனைத்து துன்பங்களையும் இறைவனும் அனுபவித்து அதன்மூலம் மக்களுக்கு பாடம் புகட்டியுள்ளார் .

அவதாரசிறப்புகள் ரகு குலத்தில் தசரத சக்கர வர்த்திக்கு மகனாக உதித்த ராமன், சீதா தேவியை மணந்து ஏக பத்தினி விரதனாக இருந்தார். தந்தைக்கு செய்துகொடுத்த சத்தியத்தை காப்பாற்றினார். அரக்கன் ராவணனை சம்ஹாரம்செய்து மக்களை காத்தார். ராமனின் சிறப்புகளைவிளக்கும் ராமாயணம் நமது இதிகாசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இது ராம அவதாரத்தை பற்றியும், அவர்செய்த சாதனைகளை பற்றியும் தெளிவாக எடுத்துக்கூறுகிறது.

ராமநவமி கொண்டாட்டம் அவதார நாயகன் உதித்தநாளை, ஸ்ரீராம நவமிவிழாவாக ஆண்டுதோறும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்துநாட்களை முன்பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்துநாட்களைப் பின்பத்து எனவும் 20பது நாட்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்த நாட்களில் ஸ்ரீ ராமரை வழிபட்டு விரதம்மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு நீர்மோர், பானகம்,சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.

பானகம் , நீர்மோர் போன்றவை ஸ்ரீ ராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்தபோதும், கானகவாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர்மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவையிரண்டும் ஸ்ரீராம பிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகவிழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜைசெய்து, பருப்பு, வடை, நீர்மோர், பானகம், பாயசம் நிவேதனம்செய்து வழிபடுவார்கள். ஸ்ரீ ராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயண புத்தகத்தையும்வைத்து பூஜிப்பார்கள். ராமநாமத்தின் மகிமை பகவானின் 1000 நாமங்களுக்கு இணையானது ராமநாமம். ஸ்ரீராம நவமியன்று ராம நாமம் சொல்வதும், ராம நாமம் எழுதுவதும் நற்பலனை தரும்.

பகவான் நாமம் இதயத்தை தூய்மைப்படுத்தி உலக ஆசைஎன்னும் தீயை அணைக்கிறது. இறைஞானத்தை தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளை சுட்டுப்பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள்கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ராமநாமத்தை சொல்லி ராமநவமி கொண்டாடுவோம். தசரதமைந்தனின் அருள் பெறுவோம்.

Leave a Reply