பாஜக ஆட்சிக்கு வந்தால், வலுவான தீவிரவாத எதிர்ப்புசட்டம் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய அரசு மென்மையான போக்கினை கையாளுவதால் பெங்களூர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. பாஜக ஆட்சிக்கு வந்தால், வலுவான தீவிரவாத எதிர்ப்புசட்டம் கொண்டு வருவதற்கு முன்னுரிமை தரப்படும் என்று துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அரசியலாக்க பாஜக விரும்பவில்லை. இருப்பினும் இந்த மனிதநேயமற்ற தீவிரவாத தாக்குதல் பற்றி காங்கிரஸ் தெரிவித்தகருத்து அனைவருக்கும் தெரியும். தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோத சக்திகளை ஒடுக்குவதில் மத்தியஅரசு மென்மையானபோக்கை கையாளுவதால் பெங்களூர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன.

அடுத்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், வலுவான தீவிரவாத எதிர்ப்புசட்டம் கொண்டுவருவதற்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒவ்வொரு தேர்தலிலும் உள்நாட்டு மற்றும் தேசியபாதுகாப்பு விவகாரங்களுக்கு பா.ஜ.க முன்னுரிமை தந்து வருகிறது. சட்ட சபைத் தேர்தலுக்கான பா.ஜ.க.,வின் பிரச்சாரம் ஏப்ரல் 21-ம் தேதி துவங்குகிறது. இதில் மூத்த தலைவர்கள் அத்வானி, கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆனந்த்குமார் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply