நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்  பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவிக்கவேண்டும் என்று பாஜகவின் ராஜஸ்தான் மாநிலத் தலைவரும் அம்மாநில முன்னால் முதல்வருமான வசுந்தரா ராஜே வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேலும் அவர் பேசியதாவது; குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, அம்மாநிலத்தில் மட்டுமல்ல நாடுமுழுவதும் பிரபலமான தலைவராக உள்ளார் . மோடி சிறப்பாக செயல் படுவதாக மக்கள் பாராட்டுகின்றனர். மக்களின் மனநிலையை நன்கு கணிக்க கூடியவர் மோடி

மோடிக்கு பதிலாக பிரதமர்வேட்பாளராக அறிவிக்க தகுதி வாயந்த பெண்கள் கட்சியில் இல்லையா என்ற கேள்விக்கு, “”மோடி 12 வருடங்களாக குஜராத் மாநில முதல்வராக இருக்கிறார் . நான் 5 வருடங்கள் தான் ராஜஸ்தான் முதல்வராக பதவிவகித்தேன். ராஜஸ்தான் மாநிலத்தில் விழிப் புணர்வு யாத்திரை மேற்கொண்ட போது, மோடியின் பெயரை உச்சரித்த போதெல்லாம் மக்கள் ஆரவாரம்செய்தனர். தேர்தலில் பிரசாரம்செய்ய ராஜஸ்தான் மாநிலத்துக்கு மோடியை அழைப்பேன்” என்றார்.

Leave a Reply