மோடியின் பெயர் முன்னிறுத்த படுவதால், எந்த சர்ச்சையும் இருப்பதாக  கருதவில்லை தே.ஜ., கூட்டணியில், கட்சிகள் மேலும் சேருவதால், பலன் அடைவதையே விரும்புகிறோம்; மோடியின் பெயர் முன்னிறுத்த படுவதால், எந்த சர்ச்சையும் இருப்பதாக, நாங்கள் கருதவில்லை. என்று பா.ஜ.க., மூத்த தலைவர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, அருண்ஜெட்லி, பெங்களூரில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட மாட்டார் என,பா.ஜ.க., முன்னாள் தலைவர் நிதின்கட்காரி, பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு உறுதியளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதுதான் சிக்கலுக்கு காரணமானது. கட்டுப்பாடான கட்சியை நாங்கள் நடத்துகிறோம்.பிரதமர்வேட்பாளர் தொடர்பாக, கட்சி முடிவுஎடுத்தால் மட்டுமே, அதுகுறித்து கருத்துதெரிவிக்க முடியும்.

தே.ஜ.,கூட்டணியில், கட்சிகள் மேலும் சேருவதால், பலன் அடைவதை விரும்பு கிறோம்; அதற்காக எந்ததியாகமும் செய்வோம் என்று அர்த்தமல்ல. இப்போதைக்கு அதுகுறித்து , கருத்து எழவில்லை. எங்கள் வேட்பாளர் குறித்து, நாங்கள் முடிவுசெய்யும் போது, அதுபற்றி தெரிவிப்போம்.

மோடியின் பெயர் முன்னிறுத்தப் படுவதால், எந்த சர்ச்சையும் இருப்பதாக, நாங்கள் கருதவில்லை . நரேந்திரமோடி, மிகவும் புகழ்பெற்ற தலைவரே. இதனால், நாங்கள் பெருமிதம் அடைகிறோம். 3வது அணி என்பது, தோற்றுப்போன விஷயம். கூட்டணி அரசு எனும் யுகத்தில் இருக்கிறோம். நாங்களும் இதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். என்று அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply