தக்காளிமலிந்தால் சந்தைக்கு வராமலா போகப்போகிறது? இந்தியாவிலிருந்து சென்று இலங்கையில் உள்ள கொழும்பு டொக்யாட் என்னும் துறைமுகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் சுமார் 800 இந்தியத்தொழிலாளர்களை அடுத்த வருடம் முதல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவுள்ளது இலங்கை.

அத்தோடு இலங்கையின் உருக்கு ஆலைகளில் வேலைசெய்யும் சுமார் 1500 இந்திய தொழிலாளர்களுக்கும் இதேகதிதான் ஏற்படவுள்ளது. இதைவிட சீனக் குடாவில் இருக்கும் இந்திய எண்ணெய் குதங்களையும் படிப்படியாக இந்தியாவின்பிடியில் இருந்து விடுவிக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுவருகிறது..

அதற்கு கட்டியம் கூறுவது போல்,இந்தியாவினால் பயன் படுத்தாமல் இருக்கும் சில எண்ணெய்க் கிணறுகளை இலங்கை தனதுபொறுப்பில் ஏற்கனவே எடுத்துக்கொண்டுள்ளது. அம்பாந் தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு தாரைவார்த்தது போல், திரு கோணமலைத் துறை முகத்தையும், அதனை அண்டியபகுதியில் இருக்கும் எண்ணெய் கிணறுகளையும்  சீனாவுக்கு, இலங்கை தாரைவார்க்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என எதிர்பார்க்கப் படுகிறது.

திருகோணமலைத் துறைமுகம் உலகில் 2வது பெரிய, இயற்கைத் துறைமுகம் ஆகும். பிரிட்டிஷ் காரர்கள் முதல், சீனர்கள், அமெரிக்கர்கள் வரை எப்போதுமே இந்த துறைமுகத்தின் மீது கண் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது பிரிட்டிஷ் காரர்களிடம் இந்த துறைமுகம் இருந்தபோதுதான் 100கு மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகளை பிரிட்டன் நிறுவியது. அந்த எண்ணெய் கிணறுகளில் இருந்தே யுத்தத்தின் போது நங்கூரமிட்டிருந்த பெரிய கப்பல்களுக்கு எண்ணெய் விநியோகம்செய்யப்பட்டது. துறை முகத்தின் அருகில் எண்ணெய்க் கிணறுகள் இருப்பது மிகஅரிதான ஒன்று. அதிலும் மிக பெரிய எண்ணெய்க் கிணறுகள் இருப்பது மிகமிக அரிதான ஒன்று.

தமிழரின் பாரம்பரியமண் திருகோணமலை. இதை விட கடலின் நான்கு பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டுள்ள பிரதேசம் திருகோணமலை துறைமுகம் ஆகும். எத்தனை கப்பல்களையும் தன்னகத்தே கொள்ளக்கூடிய இயற்கை அரணே அந்த அற்புதமலைகளால் சூழப்பட்ட திருகோணமலை துறை முகம் ஆகும். வல்லரசுகளின் கழுகுப்பார்வை அதில் மீண்டும் பட்டுவிட்டது .ஆனால் ஜெயிக்கப்போவது நிச்சயம் சீனாவாகவே இருக்கும் என நம்பலாம். எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.தக்காளிமலிந்தால் சந்தைக்கு வராமலா போகப்போகிறது?

Leave a Reply