ஆசை அறுபதுநாள். மோகம் முப்பதுநாள் என்பார்கள். ஆனால், நமது மோகமோ அறுபது வருடங்களை கடந்துநிற்கிறது.

ஆங்கிலம் மீதானமோகத்திற்கு அடிமையாகி வாழ்ந்து கொண்டிருக்

கிறோம். ஒரு குழந்தையை பிறந்தவுடன் தாய்தந்தையிடம் இருந்து பிரித்து வளர்த்தால் எப்படி தன் மொழி தன்அடையாளத்தை இழந்து அந்தகுழந்தை வளர்ந்து திரியுமோ, அதுபோன்று இன்றைய ஆங்கில கல்வி நமதுதொழில், நமது சிந்தனை, நமதுகலாச்சாரம், மொழி என்று அனைத்தையும் பாதித்து நடுத் தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

பொதுவாக வரலாறு என்றாலே பழங்கதைகள்பேசி பழைய சம்பிரதாயங்களை பின்பற்றி வாழவைக்கும் பொழுதுபோக்கும் அம்சமாகவே நம்மனதில் எண்ணம புகுந்த்துள்ளது. வரலாறு என்பது காசுகொடுக்காததால் அது புறக்கணிக்கப்பட்டு விட்டது.

ஆல மரத்திற்கு விதை எவ்வாறு மூலமாக உள்ளதோ அதுபோல் நாம் ஒளிவதர்க்கும் வரலாறு முக்கிய மானதாகும். விதைபோன்றது. விதை தலைமுறை தலை முறையாக சிதைந்துவிடாமல் பாதுகாப்பது நமது கலாச்சாரம். நமது சமூககட்டமைப்பு.

1924 இல் கொங்குநாட்டு வரலாறு புத்தகத்தை எழுதிய முத்துசாமி கோனார் "தன் வரலாற்றை தான்அறியாதவன் அழிந்ததுபோவான்" என்கிறார். தன்குலம், தன்கடமை, தன்பொறுப்பு முதலியவற்றை வரலாறு தனது தாய்தந்தை மூலமாக நமக்கு கொடுத்துள்ளது. தன்பெற்றோர் கூற்றுப் படி நமது வரலாற்றை பாரம்பரியத்தை நாம் உணர்ந்து நடந்துகொள்வது நமது கடமையாகும். பிழைப்பிற்கு ஆங்கிலம் கல்விகற்றோம் அதற்காக அதனிடம் நம்மை அர்ப்பணித்து அடிமையாககூடாது.

நம் வழக்கில் ஒருசொலவடை உண்டு "எல்லாம் நிலைச்சுவரணம்" என்று. எல்லாம் நிலைச்சு வரனம்ன்ன நம்மை நாமே உணரவேண்டும் அயல் மோகத்தை விட்டொழிக்கவேண்டும்.

Leave a Reply