சாக்கோ தயாரித்த வரைவு அறிக்கையை ஏற்கமாட்டோம்  2ஜி அலைக்கற்றை விவகாரம் குறித்து விசாரித்துவரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) தலைவர் பிசி. சாக்கோ தயாரித்த வரைவு அறிக்கையை ஏற்கமாட்டோம் இந்த வரைவு அறிக்கையை வாக்கெடுப்புக்கு விடவேண்டும். அதில் சாக்கோ வாக்களிக்கக்கூடாது’ என எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜே.பி.சி. உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுஷ்மாஸ்வராஜ் (பாஜக): பிசி. சாக்கோவை மக்களவை தலைவர் தான் நியமித்தார். அவரை மத்தியஅரசு நியமிக்கவில்லை. எனவே , சாக்கோவுக்கு எதிராக குழுவில் இருக்கும் சரிபாதி 15 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரியுள்ளதால், தார்மிக அடிப்படையில் ஜேபிசி தலைவர்பதவியை வகிக்கும் உரிமையை அவர் இழந்துவிட்டார் என்றார்

ரவிசங்கர் பிரசாத் (பாஜக): ஜே.பி.சி அறிக்கைமீது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எங்கள் கட்சியைச்சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் வலியுறுத்துவர். சாக்கோமீதே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளதால், அவர் வாக்கெடுப்பில் பங்கேற்க கூடாது என்றார்.

சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): சாக்கோ அறிக்கை ஒரு தலைப்பட்சமானது. அந்த அறிக்கையை ஏன்எதிர்க்கிறோம் என்பதை விளக்கி எங்கள்கட்சி சார்பில் விரிவான குறிப்பை தயாரித்துள்ளோம். அடுத்து நடைபெறும்கூட்டத்தில் அந்தக்குறிப்பு சக உறுப்பினர்களுக்கு தரப்படும் . சாக்கோ தயாரித்துள்ள அறிக்கையின் தவறுகளை சுட்டிக் காட்டும் முழுமையான அறிக்கையாக அதுஇருக்கும்.

Leave a Reply