திருவுருவங்கள் பார்க்கும் பார்வையில் இல்லை ; உணர்வில் தான் உள்ளது கல்கத்தாவின் முக்கிய வீதிகளில் ஒன்று அது .இரவு 8 மணி இருக்கும் .கல்கத்தா காளி உற்சவ மூர்த்தியாய் எழுந்தருள ,சுவாமி விவேகானந்தரும் கூட்டத்தினருடன் ஊர்வலத்தைப் பார்த்து கொண்டிடுந்தார் .

பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவன் சுவாமிஜியைப் பார்த்து ,''இந்த மக்களுக்கு வேறு வேலையே கிடையாது .ஏதாவது ஒரு பொம்மைக்கு அலங்காரம் செய்து கொண்டு ஊர்வலம் வருவார்கள் .பக்தி எனும் பேரில் பணத்தையும் ,நேரத்தையும் வீணடிப்பார்கள் ''என்றான் .

சுவாமிஜி அவனைப் பார்த்து , '' என்ன சொன்னாய் ?ஊர்வலம் வரும் பவதாரணியை வெறும் பொம்மை என்றா சொன்னாய் ? இப்போது அந்த பொம்மையை உற்றுப்பார் ''என்று சொல்லி அவனது கையைப் பிடித்தார் .

உடல் முழுவதும் மின்னல் பாயும் உணர்வு பெற்ற அவன் சிலையை உற்றுப்பார்க்க ,பவதாரணி இவனைப் பார்த்து சிரிப்பதை பார்த்து அதிர்ந்தான்.

"சுவாமிஜி என்னை விட்டுவிடுங்கள் ! எனக்கு பயமாக இருக்கிறது ! உயிரோட்டமுள்ள பவதாரிணியே ஊர்வலம் வருவதை உணர்ந்து கொண்டேன் " என அலறினான் .

சுவாமிஜி "திருவுருவங்கள் அவரவர் பார்க்கும் பார்வையில் இல்லை ; உணர்வில் தான் உள்ளது "என்றார் .

Leave a Reply