முதல்வர் வேட்பாளர் யார் என கேட்டால் கையைமட்டும் காட்டுகிறார்கள் கர்நாடகத்தை யாருடையகையில் ஒப்படைக்க போகிறீர். காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார் என கேட்டால் கையைமட்டும் காட்டுகிறார்கள். அந்த கை யாருடையதாக இருக்க போகிறதோ, எதை அழிக்கப்போகிறதோ என்று நரேந்திரமோடி பேசியுள்ளார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பெங்களூரில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் மேலும் பேசியதாவது ; கர்நாடகத்தை யாருடையகையில் ஒப்படைக்க போகிறீர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்வேட்பாளர் யார் என பா.ஜ.க., தலைவர்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கேட்டுவிட்டார்கள். கேட்டால் கையைமட்டும் காட்டுகிறார்கள். முகத்தையும் சேர்த்து காட்டுங்களேன். அது யாருடையகையாக இருக்க போகிறதோ, எதை அழிக்கப்போகிறதோ தெரியவில்லை.

கர்நாடகத்தில் கடந்த 9 மாதங்களாக மிகச்சிறந்த ஆட்சியை தந்துள்ளார் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டார். கர்நாடகத்திலும் குஜராத்திலும் பா.ஜ.க.,வுக்கு ஒரேமாதிரியான பிரச்சனைகள் இருந்தன. ஆனாலும் நல்லாட்சியை தருவதிலிருந்து எங்களை யாராலும் நிறுத்தமுடியவில்லை என்றார்.

Leave a Reply