சோனியா காந்தி வீட்டின்  கதவை தட்டும் பலவீனமான பிரதமர் சுயமாக முடிவுஎடுக்க இயலாமல், சோனியா காந்தியின் வீட்டுக் கதவை தட்டும் பலவீனமான பிரதமரின் தலைமையில் நாடுமுன்னேற்றம் அடையவே முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கடுமையாக தாக்கி பேசியுள்ளார் .

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக. வேட்பாளரை ஆதரித்து அவர் மேலும் பேசியதாவது:- கர்நாடகம்,இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர், பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் பாஜக. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசைப்போல், காங்கிரஸ் முதல் மந்திரிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலஅரசுகள் சரியாக இயங்கவில்லை என்பதை அனைவரும் அறிவர்.

கர்நாடகத்தை பொறுத்தவரை , ஆட்சியில் இருந்த குறைபாடுகள் பின்நாட்களில் சீர்படுத்தப்பட்டுவிட்டன. நேற்று பெங்களூர் வந்த பிரதமர் மன்மோகன்சிங்கை நான் சந்திக்க நேர்ந்திருந்தால், ‘ம.பி., சத்தீஸ்கர், டெல்லி , ஜார்கண்ட், ராஜஸ்தான், ஆகிய மாநில பொதுத்தேர்தல்களுடன் நாடாளுமன்ற தேர்தலையும் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்த விரும்பினேன்.

முன்னாள் பிரதமர்களான தேவேகவுடா, சந்திரசேகர், குஜ்ரால் உள்ளிட்டவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரதமருக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை முழுமையாக பயன் படுத்தி சிறப்பானமுறையில் நாட்டை வழி நடத்தினார்கள். இந்திய பிரதமருக்கு உள்ள அதிகாரத்தை வேறுஎதனுடனும் ஒப்பிட முடியாது. அப்படிப்பட்ட அதிகாரம்படைத்த பிரதமர் மன்மோகன்சிங், மிகவும் பலவீனமான பிரதமராக இருக்கிறார் .

சுயமாக முடிவெடுக்க இயலாத மன்மோகன் சிங் போன்ற பலவீனமான பிரதமரை நான் இதுவரை பார்த்ததே இல்லை . எந்த முடிவை எடுக்கவேண்டும் என்றாலும் சோனியாகாந்தி வீட்டின் கதவை தட்டும் பிரதமராக மன்மோகன்சிங் உள்ளார். அவர் நல்லவர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவர் பலவீனமான பிரதமர். பலவீனமான பிரதமரின் தலைமையில் ஒருநாடு முன்னேற்றம் அடையவேமுடியாது. என்று பேசினார்.

Leave a Reply