அரசியல் தலையீட்டிலிருந்து சிபிஐ-யை விடுவிப்பது தான் நமது முதல் நடவடிக்கை நிலக்கரிசுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை மத்திய சட்டஅமைச்சகத்துடனும், பிரதமர் அலுவலகத்துடனும் பகிர்ந்து கொண்ட சிபிஐ-யின் நடவடிக்கைக்கு கடும்கண்டனத்துக்கு உரியது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்கஊழல் தொடர்பான சி.பி.ஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில், இதனை உறுதிபடுத்தும் விதமாக கடந்த வாரம் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கடந்தவாரம் தாக்கல்செய்த அபிடவிட்டில், நிலக்கரி சுரங்கஊழல் குறித்த சிபிஐ விசாரணை அறிக்கையை சட்டஅமைச்சகத்துடனும், பிரதமர் அலுவலகத்துடனும் பகிர்ந்து கொண்டதாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.

இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் சட்டஅமைச்சர் அஸ்வினிகுமார் மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அறிக்கையை சட்டஅமைச்சகத்துடன் பகிர்ந்து கொண்டதற்காக சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்தன நீதிபதிகள், இது மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் , வழக்கின் ஒட்டு மொத்த நடவடிக்கையையே உலுக்குவதாக இருக்கிறது , விசாரணை அறிக்கையை அரசுடன் பகிர்ந்து கொண்டதை பற்றி நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? என கேள்வி எழுப்பினர் , அரசியல் எஜமானர்களின் அறிவுறுத் தல்களை ஏற்று சி.பி.ஐ., செயல்படக்கூடாது என்றும் கூறினர்.

அரசியல் தலையீட்டிலிருந்து சிபிஐ-யை விடுவிப்பது தான் நமது முதல் நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்றும், சி.பி.ஐ.,யை மீண்டும் சுதந்திரமான அமைப்பாக மாற்றவேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

Leave a Reply