பவன் குமார் பன்சால்   பதவி விலகவேண்டும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சாலின் உறவினர் லஞ்சம்பெற்ற குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரும் பதவி விலகவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவர் ரவிஷங்கர் பிரசாத் கூறுகையில், பன்சாலின் உறவினர், லஞ்சம்பெற்ற குற்றத்துக்காக கைது செய்யப் பட்டுள்ளார். இந்நிலையில, கைதுசெய்யப்பட்ட உறவினருடன், எந்த வர்த்தக உறவையும் தான் மேற்க்கொள்ள வில்லை என்று பன்சால் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய அமைச்சரவையில், தவறுசெய்யும் தங்களது அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை பாதுகாப் பதிலேயே பிரதமரும், சோனியாகாந்தியும் அக்கறை காட்டுகிறார்கள் . ஊழலில் மத்திய அரசு பழைய சாதனைகளை முறியடித்து புதியசாதனை படைத்துவருகிறது என்றார்.

Leave a Reply