இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுமின்சாரம் தேவை இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுமின்சாரம் தேவை என்று கூறி கூடங்குளம் அணுவுலை செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி தந்து அதிரடி தீர்ப்பை அளித்தது.

பூவுலகின் நண்பர் கள் அமைப்பின் சார்பில் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

அணுவுலை செயல்பட அனுமதி தந்து தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், இந்தியாவின் அணுசக்தி கொள்கையை மதிப்பதாகவும் . எரிசக்தி தேவைக்காக அணுவுலையில் பயன் படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாப்பாகசேமிக்கும் முறையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

கூடங்குளம் பாதுகாப்பாக இருக்கிறது . நாட்டின் மக்கள் தொகைப்பெருக்கத்துக்கு ஏற்பவும், பொதுநலன் கருதியும், நாட்டின் வளர்ச்சிகருதியும் கூடங்குளம் திட்டம் அவசியம் தேவை. நம் நாட்டின் மின்சாரத் தேவைக்கு அணுவுலைகள் அவசியம் . இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுமின்சாரம் தேவை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. .

Leave a Reply