பவன் குமார் பன்சால் உறவினர்களின் நிறுவனங்கள் பற்றி சிபிஐ. விசாரிக்க  வேண்டும் ரயில்வே லஞ்சவிவகாரத்தில் சிக்கியுள்ள பவன் குமார் பன்சால் உறவினர்களின் நிறுவனங்கள் பற்றி சிபிஐ. விசாரிக்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக. வின் சட்டப்பிரிவு தலைவரும், செயற் குழு உறுப்பினருமான சத்யபால்ஜெயின் தெரிவித்ததாவது ; பவன் குமார் பன்சாலின் குடும்பஉறுப்பினர்களும் உறவினர்களும் மூன்று நிறுவனங்களை நடத்திவருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் அவர்களது சொத்து பலமடங்கு அதிகரித்துள்ளது.

விப்ஜியார் டிசைன்ஸ் பிரைவேட் லிமிடெட், பன்சிரௌனாக் எனர்ஜி குரூப் லிமிடெட், தியோன் பார்மா சூடிகல்ஸ் லிமிடெட் என்னும் அந்த 3 நிறுவனங்கள் பெற்றகடன்கள் மற்றும் முன்பணம்தொடர்பான ஆவணங்களை அவர் வெளியிட்டார்.

இந்த நிறுவனங்களை தொடங்குவதற்கான பணம் எங்கிருந்துவந்தது? இதில் பன்சால் உறவினர்களுக்கு பங்குகளை ஒதுக்கியது ஏன்? என கேள்வி எழுப்பினார் சத்யபால் ஜெயின்.

Leave a Reply