நெருப்போடு விளையாட வேண்டாம் என் பெயரை ஊழல் குற்றச் சாட்டில் இழுக்கவேண்டும் என மத்திய அரசு வரிந்து கட்டிக்கொண்டு வேலைசெய்கிறது. நெருப்போடு விளையாடவேண்டாம் என மத்திய அரசை மேற்குவங்க முதல்வர் மமதாபானர்ஜி எச்சரித்துள்ளார்.

புர்ட்வான் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மமதாபானர்ஜி, மத்திய அரசை எதிர்த்து கடுமையாக சாடினார். : நிலக்கரி சுரங்கஊழல் கதாநாயகர்கள் எங்களுக்கு எதிராக சதி வலை பின்னத் தொடங்கியுள்ளனர். எங்களுக்கு இடையூறு ஏற்படுத்த தனதுகட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா துறைகளையும் மத்திய அரசு ஏவிவிட்டுள்ளது.

நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தபோதே எங்கள் கட்சி எம்பி.க்கள் மீது வருமானவரி துறையினரை மத்தியஅரசு ஏவி விட்டது. உங்களோடு இருந்தகாலத்தில் நாங்கள் கெட்டவர்களாக இருந்தோம் என்னும்போது உங்களுடன் இல்லாத நேரத்திலும் நாங்கள் கெட்டவர்கள்தான் என்றார் .

Leave a Reply