பவன் குமார் பன்சால்  அஸ்வனிகுமார் போன்று பிரதமரும் ராஜினாமா செய்ய வேண்டும் சர்ச்சைக்குரிய மத்திய அமைச்சர்கள் பவன் குமார் பன்சாலும் அஸ்வனிகுமாரும் ராஜினாமாசெய்தது தாமதமான நடவடிக்கை . அவர்களை போன்று பிரதமர் மன்மோகன் சிங்கும் பதவி விலகவேண்டும் என பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இது குறித்து மேலும் தெரிவித்ததாவது ; இது மிகவும் கால தாமதமான நடவடிக்கை. இந்த கோரிக்கையைத் தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்தோம். ஆனால் அப்போது இதைபிரதமர் ஏற்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் மதிப்புமிக்க நேரம் வீணடிக்கப்பட்டு விட்டது. இத்தோடு பிரச்சனை முடிந்து விடவில்லை. சட்டஅமைச்சர் அஸ்வனி குமார், பிரதமரை காப்பாற்றுவதற்காக தான் சி.பி.ஐ., விசாரணை அறிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் பிரதமர் மன்மோகன் சிங்கும் கட்டாயம் ராஜினாமா செய்தாகவேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் பதவியில் நீடிப்பதற்கு நியாயம் ஏதும் இல்லை என்றார்.

Leave a Reply