கர்நாடக தோல்வி அதிர்ச்சி தரவில்லை கர்நாடக தோல்வி தனக்கு அதிர்ச்சி தரவில்லை ஒருவேளை ஜெயித்திருந்தால்தான் எனக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என பாஜக மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது ; கர்நாடகத்தில் பா.ஜ.க., தோல்வி அடைந்ததற்காக வருத்தப் படுகிறேன். ஆனால் ஆச்சரிய படவில்லை, அதிர்ச்சியடையவில்லை. ஒருவேளை ஜெயித்திருந்தால் தான் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருப்பேன்.

கர்நாடக தேர்தல்முடிவுகள் பாஜகவுக்கு நல்லபாடம். ஒருவகையில் இது காங்கிரஸுக்கும்கூட பாடம்தான். சாதாரணமாக மக்களை கருதக்கூடாது என்பது பா.ஜ.க., மற்றும் காங்கிரஸுக்கு இந்த தேர்தல்முடிவு தந்துள்ள பொதுவான பாடமாகும். மக்கள் மிகவும் முக்கியமான வர்கள், மதிப்பு மிக்கவர்கள் என கூறியுள்ளார் அத்வானி

Leave a Reply