நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்தமுறைகேடுகள் தொடர்பாக, பிரதமர் பதவி விலகவேண்டும் என்பதில், பா.ஜ.க, மிகவும் உறுதியுடன் உள்ளது ‘ என்று , ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டில்லியில் , தனியார், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், மேலும் தெரிவித்ததாவது : நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளை விசாரித்த சிபிஐ., அறிக்கையில், சட்டஅமைச்சர் அஸ்வனிகுமார் திருத்தியதை, உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இதனால், அஸ்வனிகுமார் பதவி விலகவேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல்கொடுத்ததால், சட்ட அமைச்சர் பதவி விலகநேரிட்டது.
அதேபோன்று பிரதமர் அலுவலக அதிகாரிக்கும் இதில் தொடர்புள்ளதும் வெட்டவெளிச்சமாக்க பட்டுள்ளது. எனவே, பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற பா.ஜ.க,வின் நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அருண்ஜெட்லி தெரிவித்தார்.