முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் சண்டீகர் மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகவேண்டும் என்று பா.ஜ.க., வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து , சண்டீகர் பா.ஜ.க., தலைவர் சஞ்சய்தாண்டன் ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது :

ரயில்வே வாரிய பதவியை பெற்றுத்தருவதற்காக ரூ.10 கோடி பேரம்பேசப்பட்டதாக முன்னாள் ரயில்வே அமைச்சர் பன்சாலின் உறவினர் விஜய்சிங்லா கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், தனக்கு வாக்களித்த பொதுமக்களின் நம்பிக்கையை பன்சால் இழந்து விட்டார். எனவே, சண்டீகர் மக்களவை உறுப்பினர் பதவியையும் பன்சால் ராஜிநாமா செய்யவேண்டும் என்றார்.

Leave a Reply