குண்டுவெடிப்பில் கைதானவர்களின் வீடுகளில் அதிரடிசோதனை நடத்தியதில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வரைபடங்கள் கைப்பற்றப்பட்டன். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பாஜக அலுவலகம் அருகே குண்டுவெடித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கோவையைசேர்ந்த தீவிரவாதிகளுக்கு இந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கோவையில் தீவிர தேடுதல்வேட்டை நடந்தது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய கோவையைசேர்ந்த தீவிரவாதிகள் கிச்சன்புகாரி, வளையல் அக்கீம், தென்காசிசுலைமான் உள்பட 9பேரை பெங்களூர் போலீசார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட அனைவரையும் பெங்களூருக்கு அழைத்துசென்று தீவிரவிசாரணை நடத்தினர். அதில்குண்டு வெடிப்பில் தொடர்புடைய மேலும் ஒருதீவிரவாதி பற்றிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கேரள”வில் பதுங்கியிருந்த மேலும் ஒருதீவிரவாதியான ஜுல்புகாரி அலியை கடந்த சிலதினங்களுக்கு முன்பு கைதுசெய்து பெங்களுருக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இதற்கிடையில் கோவையில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் வீடுகளில் சோதனை நடத்த பெங்களூர் போலீசார் முடிவுசெய்தனர். அதன்படி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கோவை தீவிரவாதிகள”ன கிச்சன் புகாரி, வளையல்அக்கீம், தென்காசி சுலைமான், அஸ்கர் அலி, ரஹமத்துல்லா, சுலைமான் ஆகிய 6 தீவிரவாதிகளையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்துவந்தனர். அவர்களுடன் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு போலீஸ் தனிப்படையை சேர்ந்த இணை கமிஷனர் முருகன் தலைமையிலான 12 பேர்கொண்ட குழுவினர் நேற்று காலை வந்தனர். கோவை மாநகர போலீஸ் உதவியுடன் கரும்புக் கடை, ஜி.எம்.நகர், கஸ்தூரி கார்டன், ஆசாத்நகர், குனிய முத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். அங்கு தீவிரவாதிகளின் வீடுகளில் ஒவ்வொரு அறையிலும் அதிரடிசோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ரகசிய இடத்தில் வெடிகுண்டு தயாரிக்க பயன் படும் அமோனியம் நைட்ரேட், ஜெலட்டின்குச்சிகள் மற்றும் வரைபடங்கள் அடங்கிய சிடிக்கள், சேட்டிலைட் செல்போன் மற்றும் சில முக்கியதடயங்கள் சிக்கியது. சுமார் 3மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தசோதனைக்கு பின்னர் தீவிரவாதிகள் அனைவரும் மீண்டும் பெங்களூர் கொண்டுசெல்லப்பட்டனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply